இந்தியாவில் ராயல் என்ஃபீல்டிற்கு என்று தனி ரசிகர்பட்டாளமே உள்ளது. இதன் மார்கெட் சரிவை அடையாமல் இருந்தது. இந்த பைக்கிற்காக பலர் புக் செய்து மாதகணக்கில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு அந்த பைக் மீது இளைஞர்களுக்கு அலாதி பிரியம். 

இந்த எதிர்பார்ப்பு தற்போது குறைந்து வருகிறது . ஆம், 70′ 80’களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா பைக் மாடல் மீண்டும் களமிறங்கி உள்ளது. இந்த மாடலைஷதற்போது மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜன்ட்ஸ் மூலமாக மீண்டும் ராயல் என்ஃபீல்டிற்கு எதிராக களமிறக்கியுள்ளது. இந்நிறுவனம் ஜாவா, ஜாவா 42, ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களை அறிமுகபடுத்தியுள்ளது. 

இந்த மாடல்கள் அடுத்த வருடம் ஜூனில் தான் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கான  முக்கிய நகரங்களில் டீலர்ஷிப் வேலைகளை  தற போது வெகு வேகமாக நடத்தி வருகிறது. மேலும் வரும் ஜனவரியில் முக்கிய நகரங்களில் டீலர்ஷிப்களை உறுதி செய்துவிடும். இதனால் ராயல் என்ஃபீல்டு விற்பனை தற்போதே குறைந்து வருகிறது.

அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக 70,126 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையானது, 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 65,744 ஆக சரிவடைந்துள்ளது. இந்த விற்பனை தகவலை ராயல் என்ஃபீல்டு நிர்வாகமே அறிவித்திருந்தது.

DINASUVADU