இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்து மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் , கூட்ட நெரிசலை சமாளித்து வேறு இடத்திற்கு செல்ல பெட்ரோல், டீசல் வாகனங்களையே மக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் காற்று அதிகமாக மாசடைகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அடிக்கடி பரிந்துரை செய்து வருகிறது.

மின்சார சொகுசு கார்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தற்போது ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது,அந்நிறுவனம் மின்சார காரிலும் மற்ற வாகனங்களுக்கு இணையான தொழில் நுட்பத்தையும், அதற்க்கு இணையான சொகுசு தன்மையும்,தாராளமான இடம் கொண்டுள்ளது.பெட்ரோல் வண்டிக்கு இணையான திறன் ஆகிய முக்கிய அம்ஸங்கள் நிறைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பாவில் தனது வர்த்தகத்தை துவங்கிய டெஸ்லா நிறுவனம் அடுத்தடுத்து ஆசிய, ஆப்ரிக்க நாடுகள், வட அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு கால் பதிக்க இருப்பதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியாவிலும் அடுத்தாண்டு தனது வர்த்தகத்தை தொடங்க இருக்கிறது டெஸ்லா நிறுவனம். 2020 இல் ம் குளுமையாக இந்தியாவில் கால் பதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் களமிறங்க உள்ள டெஸ்லா கார், மிக குறைந்த விலை மாடல் 3 ரக கார்தான் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு தொடங்கியபோதே 3 லட்ச பேர் இதனை வாங்க முன்பதிவு செய்ததால் அந்நிறுவனமே திக்குமுக்காடி போனது. அடுத்தாண்டு மாடல் 3 ரக கார்கள் விற்பனை செய்துவிட்டு, அதன்பிறகு படிப்படியாக ஷோ ரூம்கள், சர்வீஸ் சென்டர்கள் என விரிவுபடுத்த டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here