மிருதன்-2 ஆக தயாரானதா யோகிபாபுவின் ஜாம்பி?! காமெடி த்ரில் ட்ரெய்லர் இதோ!

தர்ம பிரபு, கூர்கா  படங்களை அடுத்து, கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ஜாம்பி. இந்த படத்தை  புவன் நல்லன் இயக்கி உள்ளார். இப்படதினில் யாசிகா ஆனந்த், யூ-டியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்/

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரில்  மிருதன் பட பாணியில் மேற்சொன்ன நடிகர்கள் ஒரு ஹோட்டலில் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வைரஸ்களால் பாதிக்கப்பட்டு மனிதர்களை கடித்து குதருபவர்களாக மாறிவிடுகிறார்கள் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் காமெடி கலந்து கூறியிருக்கிறார்கள் என ட்ரெய்லரில் தெரிகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.