ஜெஸ்ட் புரோ (Zest Pro) வயர்லெஸ் பவர்பேங்க் : ஒரு பார்வை..!!

Zest Pro Wireless Powerbank: A Look .. !!

ஜெஸ்ட் புரோ (Zest Pro) என்ற வயர்லெஸ் சார்ஜர் பவர் பேங்க்கை டொரெட்டோ என்ற நிறுவனம் ஒரு போர்ட்டபிள் டிஜிட்டல் பொருளான அறிமுகம் செய்துள்ளது.
இந்த பவர் பேங்க்கில் 10000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி இருந்தாலும் இதன் எடை மிகவும் குறைவாக இருப்பதால் எளிதில் வெளியே கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 இதன் மூலம் பயனாளிகள் தங்கள் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள 2 யூஎஸ்பி போர்ட்டுக்கள் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் யூஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெஸ்ட் புரோ பவர் பேங்க்கில் 10000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளது. . இதுவொரு அல்ட்ரா போர்ட்டபிள் எடை குறைந்த வகையில் டிசைன் செய்யப்படுள்ளதால் இதனை உங்களுடைய லேப்டாப் பேக்கில் அல்லது கார் குளோவில், கேரி பேக்கில் அல்லது உங்களது பேண்ட் பாக்கெட்டில் கூட வைத்து கொள்ளலாம்.
இந்த பவர்பேங்க் மூலம் சார்ஜ் ஏற்றுவதால் உங்களுடை பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இதில் உள்ள லித்தியம் பாலிமர் உதவி செய்கிறது. மற்ற ரெகுலர் லித்தியம் பேட்டரிகளை விட இதில் உள்ள லித்தியம் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
2 யூஎஸ்பி போர்ட்டுக்கள் இந்த வயர்லெஸ் பவர்பேங்க்கின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் இதில் இரண்டு யூஎஸ்பி போர்ட்டுக்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யூஎஸ்பி போர்ட் உங்களுக்கு ஒரு நண்பரை போல் உதவுகிறது என்று கூறலாம்.