உச்சகட்ட கோபத்தில் யுவன் ரசிகர்கள் !காரணம் இதுவா !

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு

By Fahad | Published: Mar 30 2020 05:28 PM

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர். ஆனால் காற்று வெளியிடை, மாம் படத்திற்காக ரகுமானுக்கு தேசிய விருது கொடுத்துள்ளனர். இவை யுவன் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜுரிக்கு இளையராஜா ரகுமான் தவிர வேறு யாரையும் தெரியாதா, தரமணிக்கு என்ன குறை, தேசிய விருதில் தொடர்ந்து பாலிடிக்ஸ் நடந்து வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News From yuvan army