கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் – கமலஹாசன்

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் – கமலஹாசன்

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மருத்துவ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியான நிலையில், அதில், தேர்வு எழுதியவர்களை விட, தேர்ச்சி அடைந்தவர்களின் புள்ளிவிவரம் மிகவும் அதிகமாக இருந்தது.

இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியானது. அதிலும் சில குழப்பங்கள் இருந்தது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து, கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்காத்தில், ‘தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள் ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube