பணத்தை வீதியில் தூக்கி எறிந்த இளைஞர்! இறுதியில் இளைஞருக்கு நடந்த விபரீதம்!

Youth throwing money at street! What happened to the young man in the end!

துபாயில் ஒருவர், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசியுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இவர் பதிவிட்ட இந்த வீடியோ குறித்து துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதனையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துபாய் காவல்துறையின் இயக்குனர் ஃபைசல் குவாஸிம் இதுகுறித்து கூறுகையில், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசிய நபரை தேடி வந்தோம். அவரை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்த நபரை விசாரித்த போது, அவர் தன்னை அதிக பேர் பின்தொடர வேண்டும் என்பதற்காகவே பணத்தை சாலையில் வீசியதாக கூறியதாக தெரிவித்துள்ளார். துபாய் அரசின் சட்டப்படி, இவ்வாறு நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை அளிக்கப்படும்.

A man in Dubai has thrown Dubai money on the road. He took the video and posted it on his social networking page. Subsequently, the Dubai Police was investigating this video which he posted. Subsequently, the man who posted the video was arrested by Dubai police. Faisal Quasim, director of Dubai Police, said, "We were looking for a man who threw money in Dubai. We have found him and arrested him. He further stated that when he was questioned, he said that he had thrown money at the road so that more people would follow him. According to the law of the Dubai government, the video is posted on social media to undermine the pride of the country and they will be prosecuted, jailed and fined.