காஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி

காஞ்சிபுரத்தில்  கங்கையம்மன் கோயில் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர்

By Fahad | Published: Apr 01 2020 03:38 PM

காஞ்சிபுரத்தில்  கங்கையம்மன் கோயில் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை நேற்று முன்தினம்  தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  மானாம்பதி பகுதியில் கங்கையம்மன் கோயில் அருகே குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த 5 பேரில், 3 பேருக்கு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த சூர்யாவுக்கு வயது 24 ஆகும்.