OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது!

OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது.

இன்று பலரும் இணையதளங்களில் வரும் பல போலியான  ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விற்பனையாளர் தளமான OLX இல் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக, எஞ்சினியரிங் படித்த 29 வயது இளைஞர், ஒரு இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.

இந்த இளைஞரின் வலையில் சிக்கிய மருத்துவர் ஒருவர், ஒரு ஐபோனுக்காக ரூ.1.75 லட்சம் வரை  இழந்துள்ளார். இதனையடுத்து இந்த மருத்துவர் சம்பவம்  குறித்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த இளைஞரின் மோசடி செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஏமாற்றப்பட்ட நபர் டெல்லி போலீசில் வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, காவல் துறையைச் சேர்ந்த சைபர் கிரைம் வல்லுநர்கள் குழு வழக்கு தொடர்பான தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியதோடு, 29 வயதான பர்வி அகமது என்பவர் இந்த தான் இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.