நாக்கு மூலமாக வருமானத்தை குவிக்கும் இளம் பெண்..!

சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராமில் தங்களது திறமைகளை

By murugan | Published: Sep 24, 2019 03:59 PM

சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராமில் தங்களது திறமைகளை சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை கொண்டு வருமானமும் சம்பாதித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மிகல்யா என்ற 21 வயது  இளம் பெண் ஒருவர் தனது நாக்கு  மூலமாக இந்த வருடம் 70 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு மற்றவர்களை போல நாக்கு இல்லாமல் அதை விட நீளமான நாக்கு உள்ளது. இதன் காரணமாக இவர் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகியுள்ளார்.
 
View this post on Instagram
 

Should I stop making tongue videos? Or Na? ???

A post shared by KKVSH (@kkvsh) on

மேலும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது நாக்கு மற்றும் நடனம் ஆடும்  வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். விளம்பரம் மூலமாக அதிகமாக சம்பாதித்தி வருகிறார். கடந்த வருடம் 35 லட்சம் ரூபாய் சம்பாதித்தார். இந்த வருடம் அதை விட இருமடங்கு 70 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் , மற்றவர்களை விட நீளமாக இருப்பதை நான் சிறுவயதில் உணர்ந்தேன். இந்த நாக்கு தான் எனக்கு தற்போது அதிக பணத்தை சம்பாதித்துக் கொடுக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் இரண்டு மடங்கு வருமானம் அதிகரித்து உள்ளது என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc