வாட்சப்பில் தனது குடும்பத்தினரிடம் தாம் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இறந்த இளைஞன்!

டெல்லியில் உள்ள சாந்தினி சோக்க்கில் ஹர்ஷ் கண்டேல்வால் என்ற இளைஞர் தனது திருமணமான சகோதரி உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் ஜூன் 30-ம் தேதி இரவு தனது நண்பரின் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடசெல்வதாக சென்றுள்ளார்.பின்னர் ஜூலை 1-ம் தேதி அவரின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் ஒரு வாட்ஸ் அப் சேத்தி வந்துள்ளது.

அதில் தயவு செய்து என்னை மன்னியுங்கள் மம்மி,பாப்பா எனது ஸ்கூட்டர், பர்ஸ் மற்றும்பிற பொருட்கள் ITO பாலத்தில் இருக்கும் அந்த பாலத்தின் அடியில் எனது உடல் இருக்கும் என்று பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த பதிவை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அந்த பாலத்திற்கு சென்று பார்த்துள்ளனர் அதில் அவரது பொருட்கள் இருந்துள்ளன.ஆனால் அவரின் உடல் அந்த பாலத்தின் அடியில் இல்லை.

பின்னர் அவரின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்களின் புகாரை காவல்துறையினர் அப்போது அலச்சியமாக எடுத்து கொண்டதாக ஹர்ஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி ஹர்ஷின் உடலை யமுனை ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினர் இது ஒரு கொலை வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி காலையில் ஹர்ஷிடம் பேசியதாகவும் அவர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று கூறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஆனால் சில நிமிடங்களில் வாட்ஸ் அப்பில் இவ்வாறு பதிவு வந்ததை எண்ணி சந்திக்கமடைந்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் ஹர்ஷின் நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.