பிரேமம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் முதல் துல்க்கர் சல்மான் தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.

மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் பெரியளவில் ரீச்சானது.

இந்த நிலையில் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் யாரும் இதுவரை அறியாத தகவலை கூறியுள்ளார். முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க துல்க்கர் சல்மானை தான் தயாரிப்பாளர் திட்டமிட்டராம். ஆனால் நிவின் பாலி இந்த படத்திற்கு சரியாவார் என்று கூறி உறுதியாக அல்போன்ஸ் கூறியதால் தான் நிவின் நடித்ததாக கூறியுள்ளார்.