தல தளபதி குறித்து பிரபல நடிகை என்ன கூறினார் தெரியுமா.!

தல தளபதி குறித்து பிரபல நடிகை என்ன கூறினார் தெரியுமா.!

அஜித் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் என்றும், அனைவரிடமும் சகஜமாக பேசுபவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்தின் ரிலீஸில் உள்ளது. மேலும் அஜித் அவர்கள் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் தல தளபதியை புகழ்ந்து கூறியுள்ளார். இவர் விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா உள்ளிட்ட படங்களிலும், அஜித்துடன் விவேகம் படத்திலும் நடித்துள்ளார். இவர் தல-தளபதி குறித்து கூறியதாவது, தமிழ் சினிமாவின் ஒரு திறமையான நடிகர் தான் விஜய் என்றும், அஜித் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் என்றும், அனைவரிடமும் சகஜமாக பேசுபவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார். 

Join our channel google news Youtube