ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள்! இது கிரிமினல் குற்றமாகும்!

ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள்! இது கிரிமினல் குற்றமாகும்!

  • ஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பிரித்வி ராஜ்.
  • ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள்.
நடிகர் பிரித்திவி ராஜ் பிரபலமான இந்தி நடிகர் ஆவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் ஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கல்வியை போதிக்கும் இடத்துக்குள் புகுந்து சட்டத்தை மதிக்காமல் வன்முறையை ஏவி விட்டு ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள். இது கிரிமினல் குற்றமாகும். இதை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.