இனி ஆன்லைனில் நோக்கியாவை(Nokia Online Store) நேரடியாக வாங்கலாம்..!!

 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய நோக்கியா நிறுவனம்  தொடங்கியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, இந்தியாவில் அதன் ஆன்லைன் மொபைல் ஸ்டோரைத் திறந்துள்ளது. இதன் வழியாக ஒரு பயனர் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில், தற்போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும்  கருவிகள் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் ஆக்சஸெரீகளையும் பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த வலைப்பக்க, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளங்களை போன்றே இலவச ஷிப்பிங் மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பங்களையும் குறிப்பிடுகிறது. கூடுதலாக, ஒரு 10 நாள் ரிட்டர்ன் பாலிசியையும் அறிவித்துள்ளது, இது “விற்பனையாளர் விதிகளுக்கு உட்பட்டுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறியபடி, நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்திய சந்தையில் கிடைக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும்  தொலைபேசிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவைகள் அனைத்துமே விற்பனைக்கு திறந்து விடப்படவில்லை. அதாவது நோக்கியா 5, நோக்கியா 3, நோக்கியா 2 மற்றும் நோக்கியா 8 ஆகியவைகள் வாங்க கிடைக்கும் , நோக்கியா 6 ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கவில்லை. நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 ப்ளஸ், புதிய நோக்கியா 6 (2018) மற்றும் பட்ஜெட் நோக்கியா 1 ஆகியவையும் இதில் அடங்கும்.

நோக்கியா 3310 இரட்டை சிம், நோக்கியா 150 டூயல் சிம், நோக்கியா 105, நோக்கியா 105 டூயல் சிம், நோக்கியா 230 டூயல் சிம், நோக்கியா 216 இரட்டை சிம் மற்றும் நோக்கியா 130 டூயல் சிம் உள்ளிட்ட பல நோக்கியா பீச்சர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்ரோ தொலைபேசியான, நோக்கியா 8810 4ஜி வாங்குவதற்கு கிடைக்கவில்லை.

இதற்கிடையில், நோக்கியா 6 (2018), நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 7 பிளஸ் போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களானது, வருகிற ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment