அழகிய கூந்தலுக்கு தயிர் போதும் - எப்படி தெரியுமா?

பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லாருக்குமே முடி என்பது ஒரு அழகு தான், முடி இல்லாதவர்களை

By Rebekal | Published: Apr 04, 2020 08:40 AM

பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லாருக்குமே முடி என்பது ஒரு அழகு தான், முடி இல்லாதவர்களை விட முடி இருப்பவர்கள் கூடுதல் அழகாக தெரிவது வழக்கம். ஆனால் இந்த முடியை எப்படி வளர வைப்பது அழகாக மாற்றுவது என்பதுதான் பலருக்கும் வாழ்க்கை போராட்டம்.

இந்த கூந்தலுக்கு இயற்கையாக நமக்குக் கிடைக்கக் கூடிய தயிர் மட்டுமே போதும். இந்த தயிரை வைத்து எப்படி அழகிய கூந்தலை வரவழைப்பது என்பது தெரியுமா? வாருங்கள் பாப்போம்.

முதலில் நமது முடியை கழுவிவிட்டு அதன் பின்பு உலர்ந்த முடியில் தயிரை எடுத்து முடியின் வேர் கால்களில் படுமாறு வைக்கவும். முகத்தில் நாம் பேக் போடுவது போல கூந்தலுக்கு பேக் போட்டு 20 நிமிடம் மட்டும் வைத்துவிட்டு குளித்தால் போதும். தொடர்ச்சியாக இது இரு மாதங்களுக்கு செய்து வந்தாலே போதும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் அழகிய கூந்தல் உங்களுக்கு கிடைக்கும். 

Step2: Place in ads Display sections

unicc