நேற்றைய போட்டிகள் இரண்டுமே விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி ! எப்படி தெரியுமா ?

Yesterday's match was a match for both wicket-keepers! Do you know how?

50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.இதற்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்றவாறு நேற்று இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.இதில் ஒரு பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது.மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2  போட்டிகளுக்கும்  ஒரு ஒற்றுமை உள்ளது.அது என்னவென்றால் நேற்று நடத்த 2 போட்டிகளிலும் அந்த அணிகளின் விக்கெட் கீப்பர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.அதாவது நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பர்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளனர். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் டோனி  113 (78) ரன்கள்,வங்கதேச வீரர் முஸ்பிகூர் ரஹீம் 90 (94) ரன்கள்,மேலும்  மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் சாய் ஹோப் 101(86) ரன்கள் ,நியூ சிலாந்து வீரர் டாம் ப்ளெண்டல் 106 (89) ரன்கள் அடித்துள்ளனர். இதனால் நேற்றைய போட்டி  விக்கெட் கீப்பர்களுக்கு சிறந்த நாளாக அமைத்து உள்ளது என்று  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்றைய போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 91  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது,இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.