தவறான தகவலால் உயிரிழந்த எச்.ஐ.வி பாதிக்காத 22 வயது இளம் பெண்!

இமாச்சல பிரதேசம் சிம்லாவில்  இருபத்திரண்டு வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்ற தவறான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி அம்மாநில சட்டசபையில் அதிர்வலையை உண்டாக்கியது.

இறந்துபோன அந்த பெண்ணிற்கு,  ‘தனக்கு எச்ஐவி வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான சோதனை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எச்ஐவி இருப்பதாக அந்த மருத்துவமனை தகவல் கொடுத்து உள்ளது. இதனை, கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோமாவில் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

பின்னர், இறந்த அந்த பெண்ணிற்கு எய்ட்ஸ் தொடர்பான ஆரம்ப சோதனை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சி முடிவுகளை ஆராய்ந்தபோது அந்த பெண்ணிற்கு எச்ஐவி வைரஸ் தாக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு அந்தப் பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நோய் இல்லாத ஒரு பெண்ணுக்கு நோய் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இமாச்சல் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஹ்ரூ அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, இமாச்சல பிரதேச முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என அதனால் அந்த அறிக்கையை 15 நாட்களுக்குள்சு காதாரத்துறை தாக்கல் செய்ய வேண்டும், எனவும் உத்தரவிட்டுள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.