டூ வீலரில் சீட் பெல்ட் போடவில்லை அதனால் 100 ரூபாய் அபராதம்!

கோயம்புத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு

By manikandan | Published: Sep 11, 2019 02:33 PM

கோயம்புத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்தால் கோவை காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணியாத காரணத்தால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் போன்றவை சரியாக இருந்தலும் அவர் ஹெல்மெட் போடவில்லை என்பதால் 100 ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த ரசீதில் தான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு பதிலாக, சீட் பெல்ட் அணியவில்லை என தவறாக எழுதப்பட்டு இருந்தது. அதை அதிகாரிகள் கவனிக்காமல் கையொப்பமிட்டு கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார். இதனை கண்ட கார்த்திக், அந்த ரசீதை போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த ரசீது இணையதளவாசிகள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc