ஒல்லியாகணும்னு ஆசை படுறீங்களா ?அப்ப குண்டா இருக்குற இதை சாப்பிடுங்க

  • உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய்.
  • பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்.

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனையே உடல்எடை அதிகரிப்பு. இந்த உடல் எடையை குறைப்பதற்கு, செயற்கையான மருத்துவ முறைகளை கையாளாமல் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என அறிந்து அந்த வழிகளை பின்பற்ற வேண்டும்.

உடல் எடை அதிகரிப்பு

நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் ஒரு முக்கிய காரணம், மேலை நாட்டு கலாச்சாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இன்று அதிகமானோர் மேலை நாட்டு உணவு பொருட்களையே வாங்கி விரும்பி உண்கிறோம்.

Related imageஇந்த கலாச்சார சீர்கேடு மற்றும், மேலை நாட்டு உணவுகளின் மீதுள்ள மோகம் போன்றவை நம்முடைய கட்டுப்பாட்டை தாண்டி, நமது உடய்யய் அதிகரிக்க செய்கிறது. பூசணிக்காயில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் உள்ளது.

 

 

தற்போது இந்த பதிவில் பூசணிக்காயினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

உடல் எடை

உடல் எடையை குறைப்பதில் பூசணிக்காய் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள, பிரதான பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு பிரச்னை.

Image result for உடல் எடை அதிகரிப்பு

இந்த பிரச்சனையை போக்குவதற்கு பூசணிக்காய் தான் ஒரு சிறந்த தீர்வு. ஏனென்றால் பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது உடலில் தேங்கியுள்ள கேட்ட கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

Related image

 

எந்த ஒரு நோய்களும் நம்மை எளிதில் தாக்காமல் இருக்க, நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பூசணிக்காயை நமது உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கண் பார்வை

Related image

கண் பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு, பூசணிக்காய் ஒரு சிறந்த உணவாகும். பூசணிக்காயில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கண் பார்வை பிரச்னை உள்ளவர்கள் தங்களது உணவில் தொடர்ந்து பூசணிக்காயை சேர்த்து வந்தால், கண் பார்வை பிரச்சனைகள் நீங்கி விடும்.

உடற்பயிற்சி

Image result for உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடுவதற்காக சிறந்த உணவாக பூசணிக்காய் கருதப்படுகிறது. பூசணிக்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் அளிப்பதோடு, எலெக்ரோலைட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது.

உடல் சூடு

Image result for உடல் சூடு

கோடை காலத்தில் பூசணிக்காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஏனென்றால் பூசணிக்காயில் உடல் சூட்டை தனிக்கக் கொடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இது சிறுநீரக வியாதிகளை குணமாக்கி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment