‘Corona To Covid-19’ பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

‘Corona To Covid-19’ பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

  • சீனாவில் கொரோனா வைரசால் 1,113 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் அச்சிறுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (புதன்) காலை வரை 1,113-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் 4,740 பேர் இந்த வைரஸில் இருந்து குணமைடைந்து வீடு திருப்பியுள்ளார்கள் என தகவல் வந்துள்ளது. இதனிடையே, 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று அர்த்தம் என்பதால், மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட இந்த வைரசுக்கு கொரோனா என பெயர் சூட்டப்பட்டது. இதனால் கொரோனா என்ற பெயரை பயன்படுத்தி வரும் மக்களும், பல நிறுவனங்களும் வைரஸின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதில் குறிப்பாக மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ‘கொரோனா பியர்’  பல பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். எனவே, கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றினால் சுமார் ரூ.100 கோடி தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது. இதுபோன்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்ற உலக சுகாதார நிறுவனம், நேற்று( செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றியுள்ளது. அதற்கு கொவிட்-19 (Covid-19) என்று தற்போது பெயர் சூட்டப்பட்டது. கொரோனா, வைரஸ், டிசீஸ் (disease) - ஆகிய 3 சொற்களில் இருந்து இந்தப் புதிய வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 19 என்பது, வைரஸ் பரவத் தொடங்கிய ஆண்டான 2019-ஐ குறிக்கின்றது. வைரஸின் இந்த புதிய பெயர் எதையும் குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Posts

இணையத்தை கலக்கும் பிரியா பவானி சங்கரின் நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளே!
தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம்!
கொரோனா சிகிச்சை : அமெரிக்கவாழ் இந்திய சிறுமி அசத்தல்! 25 ஆயிரம் டாலர் பரிசு வென்ற சிறுமி!
பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது! - உயர்நீதிமன்ற மதுரை கிளை
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து!
அரக்கன் அரக்கி டாஸ்க் : தாடி இல்லனா குழந்தை மாதிரி இருப்பேன்டா நானு!
இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
வாட்சப் குரூப்பில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ! கோவா துணை முதல்வருக்கு வந்த சோதனை!
முதல்வர் ஏன் ஆளுநரை உடனே சந்திக்கக் கூடாது? திருமாவளவன்
டிக்-டாக் செயலியின் தடை நீக்கம்-பாக்.,அறிவிப்பு