முதலிடம் பிடித்தது இந்தியா! இந்த ஊர்களில் வாகனங்கள் ஓட்ட தகுதியே இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவின் மக்கள்தொகை உலக அளவில் இரண்டாம் இடம் உள்ளதால் இங்கு வாக்கங்களின் பயன்பாடு அதிகம். அதே சமயம் இங்கு இட நெரிசலும் அதிகம். போக்குவரத்துக்கான வாகனங்களும் அதிகம். அந்த வகையில் ஐரோப்பிய நாட்டில் உள்ள மிஸ்டர் ஆட்டோ எனும் நிறுவனம் உலகில் வாகனங்கள் ஓட்டுவதற்கு மோசமான சாலைகள் உள்ள நகரங்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஏற்ற நகரங்கள் என பட்டியிலிட்டுள்ளது.
இந்த பட்டியல் அந்நகர சாலையில் உள்ள மேடு பள்ளம், தேவை இல்லாத சிக்னல்கள், வேகத்தடைகள், அதிகப்படியான டிராபிக் சிக்னல்கள், எரிபொருள் பயன்பாடு, அரசின் செயல்பாடு, சாலை மேம்படுத்துதல் ஆகியவைகளை கணக்கிட்டு இந்த பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓட்ட மோசமான நகரங்களில் முதலிடத்தில் மும்பை நகரம் உள்ளது. இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம் உள்ளது. மூன்றாம் இடத்தில் கொல்கத்தா நகரம் உள்ளது.
இதேபோல வாகனங்கள் ஓட்ட சொகுசு நகரமாக முதலிடத்தில் கண்டா நாட்டில் உள்ள கல்காரி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுளள்து. இரண்டாம் இடத்தில துபாய் நகரமும், மூன்றாம் இடத்தில் கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா நகரமும் உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.