வெப் சீரிஸில் களமிறங்கிய உலகநாயகன்!

வெப் சீரிஸில் களமிறங்கிய உலகநாயகன். பனிஜாய் ஏஷியா டர்மரிக்

By leena | Published: Feb 06, 2020 06:37 PM

  • வெப் சீரிஸில் களமிறங்கிய உலகநாயகன்.
  • பனிஜாய் ஏஷியா டர்மரிக் மீடியாவுடன் இணைந்து வெப் சீரிஸ் உலகிற்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
நடிகர் கமலஹாசன் பழம்பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் 1960-ல் வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது வெப் சீரிஸில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'பனிஜாய் ஏஷியா டர்மரிக் மீடியாவுடன் இணைந்து வெப் சீரிஸ் உலகிற்குள் நுழைவதை  அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு சிறந்த கதைகளை கூற இது என் அடுத்த அடி' என ட்வீட் செய்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc