உலக மக்கள்தொகை தினம் உருவான விதம் !

உலக மக்கள் தொகை  தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு  உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் தேதி  உலக மக்கள் தொகை  தினம் கொண்டாடப்படுகிறது.

Image result for world population day

உலக மக்கள்தொகை வளர்ச்சி என்பது  கி.பி 1650-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகமாக  வளரத் தொடங்கியது.1840-ம் ஆண்டு மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது.அதன் பின்னர் 1927 -ம் ஆண்டு மக்கள் தொகை 200 கோடியை ஆனது. ஆனால் அடுத்த 33 வருடத்தில் 1960 -ல் மக்கள் தொகை 300 கோடி மக்கள் தொகையை  எட்டியது.

அதன் பின் 1999 -ம் ஆண்டு உலக மக்கள் தொகை  600 கோடி தொட்டது. 39  வருடத்தில் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்து என  குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்தது.

Image result for world population day

தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடி எனவும்  ஐ.நா.வின் அறிக்கை படி  2030-ல் 8.6 கோடியை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும்  உலக மக்கள் தொகை 8.3 உயர்ந்து வருகிறது.

உலக மக்கள் தொகை  சீனா மற்றும் இந்தியா மக்கள் தொகை 140 கோடி மற்றும் 130 கோடியாக உள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 -ம் ஆண்டு இந்தியா சீனாவை விட  மக்கள் தொகையில் அதிகமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

author avatar
murugan