இன்று உலக மக்கள் தொகை தினம் !முதலிடத்தில் சீனா,இரண்டாம் இடத்தில் இந்தியா

உலக மக்கள் தொகை தினம்  (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11  ஆம் தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்  கொண்டாடப்பட்டு வருகிறது.

1987 ஆம் ஆண்டில் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை  500-கோடியை தாண்டியது.இதனால் 1987-ஆம் ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது.

இதிலிருந்து ஆண்டு தோறும் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.மக்கள் தொகையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.2019 -ஆண்டு  ஐ.நாவின் ஆய்வறிக்கையில், சீனாவின் மக்கள் தொகை 143 கோடியாக உள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாக உள்ளது.மேலும்  உலக மக்கள் தொகை 770 கோடி ஆகும்.

ஆனால் வரும் 2050 ஆண்டு முதல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 27.3 கோடி  அதிகரிக்கும் என்று  ஆய்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.2050 -ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை  164 கோடியாக அதிகரிக்கும்.சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.