பிரபல தெலுங்கு நடிகரின் படத்திற்காக குரல் கொடுத்த உலக நாயகன் !

சுகந்திர போராட்ட வீரர் ,உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் படமாகிறது. அந்த அந்த படத்தில் சை ரா நரசிம்ம ரெட்டியாக நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார்.இந்த படம் தமிழ் ,மலையாளம் ,இந்தி கன்னடம்,தெலுங்கு  என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

 

இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப்பச்சன் ,விஜய் சேதுபதி ,நயன்தாரா ,தமன்னா என பல நடிகர்கள் முக்கிய ரோலில் நடித்து அசத்தியுள்ளார்கள்.இந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் அறிமுகம் தொடக்கத்தில் இடம் பெறுகிறது.எனவே இந்த படத்தின் தமிழ் பதிப்பின் தொடக்கத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பின்னணி  குரல் கொடுத்துள்ளார். தமிழில் சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த் சாமி குரல் கொடுத்துள்ளார்.