உலகக்கோப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவித்த ஐசிசி விபரம் உள்ளே

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.வரும் 30தேதி முதல் ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்_ல்  நடைபெற உள்ளது.

இதில் பங்கு கொள்ளும் நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐசிசி ஆனது உலககோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கும் பரிசுத்தொகையை        அறிவித்துள்ளது.

Image result for worldcup2019

அதன் படி  இந்தாண்டு லீக் தொடர் முதல் இறுதிப்போட்டியில் இடம்பெறும் அணி மற்றும் வெல்லும் அணி ஆகியவற்றிற்கும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி பரிசு தொகை விபரம் பற்றி காண்போம்:

 

Related image

இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகையாக 28 கோடி (40,000 டாலர் ) வழங்கபடும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இறுதி போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு 14.O4கோடி          (20,00,000 ) டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும்.

மேலும் அரையிறுதியில் தகுதிப்பெற்று அதில் தோல்வியை தழுவும் இரு அணிகளுக்கு ரூ.5.6 கோடி (800,000 டாலர்)பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

Image result for worldcup2019

மேலும் லீக் சுற்றில் தகுதிப்பெற்று  அரையிறுதிக்கு செல்லாத அந்த  6  அணிகளுக்கு ரூ.70.20 லட்சம் -(100,000 டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

சுமார் ரூ.70 கோடி  பரிசுத்தொகைகள் மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது உலகக்கோப்பை வரலாற்றில் இந்தாண்டு தான்  பரிசுத்தொகை அதிக அளவு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அளவிற்கு  இதுவரை உள்ள உலககோப்பையில் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
kavitha

Leave a Comment