உலக குத்துச்சண்டை: அரைஇறுதிக்கு அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் முன்னேறியதால் இந்தியாவிற்கு 2 பதக்கம் உறுதி..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில்  52 கிலோ எடைப்பிரிவில்  இந்திய வீரர் அமித் பன்ஹால் ,  பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை  உடன் மோதினார்.

இப்போட்டி  3 நிலையில் கொண்டது.ஒவ்வொரு  நிலையும் 3 நிமிடம்  நடைபெறும். மூன்று நிலை முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இதனால் குறைந்தது  அமித்விற்கு வெண்கலப்பதக்கம் உறுதியாகி விட்டது.

நாளை நடைபெற உள்ள அரைஇறுதியில் போட்டியில் கஜகஸ்தானை சார்ந்த சகென் பிபோஸ்சினோ உடன் மோத உள்ளார். மற்றொரு கால்இறுதி போட்டியில் 63 கிலோ  எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் ,  பிரேசில் சார்ந்த வான்டெர்சன் ஆலிவிராவுடன் மோதினார்.

இதில் மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் சென்றார். உலக குத்துச்சண்டை போட்டி ஒன்றில் இந்திய வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லப்போவது இதுவே முதல் முறை.

 

author avatar
murugan