தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது - யோகி ஆதித்யநாத்

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By balakaliyamoorthy | Published: Mar 30, 2020 10:36 AM

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது வெளிமாநில தொழிலாளர்களிடம் நலன் விசாரித்து பேசினார். பின்னர் மருத்துவமனைக்கும் சென்று தற்போது அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.

இதையடுத்து ஊரடங்கு நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்றும் அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் தினசரி கூலித் தொழிலாளர்களையும், ஏழை மக்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா ரூ.1000 வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் வீட்டு உரிமையாளர்கள் குடியிருக்கும் ஏழைகளிடமிருந்து வாடகை வசூலிக்க வேண்டாம். மக்களால் மின்சாரக் கட்டணம் செலுத்தமுடியவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc