டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்த சென்ற தொழிலாளி ஒருவர் பலி.!

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால, வெளிமாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள் பேருந்து வசதி இல்லாமல் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து கடந்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காகக் குவிந்துள்ளனர். மேலும் டெல்லியில் இருந்து நடைபயணம் மூலமே அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கிறார்கள். 

அந்த வகையில் டெல்லியில் உள்ள தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி செய்யும் பணியை செய்து வந்த 39 வயதுடைய ரன்வீர் சிங் மத்திய பிரதேசத்திலுள்ள மொரோனா மாவட்டத்திற்கு நடந்தே செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கடைக்காரர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்