மணமணக்கும் சுவையில் குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

குங்கும பூ நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கும். அசத்தலான சுவையில் குங்கும பூ லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

குங்கும பூ -1 சிட்டிகை

சர்க்கரை -2 ஸ்பூன்

தயிர் – 1கப்

நட்ஸ் -1 ஸ்பூன்

ஏலக்காய்  தூள் – அரை ஸ்பூன்

பால் -1 ஸ்பூன்

செய்முறை :

ஒரு டம்ளரில் சிறிது பால் எடுத்து குங்கும பூவை சேர்த்து நன்கு ஊற விட வேண்டும்.பின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கடைந்து  வைக்கவும்.

பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து ஊறவைத்து எடுத்த குங்கும பூ பால் சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அடிக்கவும்.இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி நட்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.