பெண்கள் டி20 உலகக்கோப்பை: இன்று ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் .!

  • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

By Fahad | Published: Apr 09 2020 03:41 AM

  • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
  • இன்று  இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த இரண்டு போட்டிகளும் பெர்த் நகரில் உள்ள W.A.C.A. மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என இரு பிரிவுகள் உள்ளன. அதில் ஏ , பி என இரு பிரிவுகளிலும் தலா 5 அணிகள் இடம்பெற்று உள்ளனர். Image இந்த டி20 உலகக் கோப்பைதொடரின் இறுதிப் போட்டி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை  இந்தியா அணி வீழ்த்தி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Image இந்நிலையில் இன்று  இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணிகளும்  மற்றொரு போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளும் போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் பெர்த் நகரில் உள்ள W.A.C.A. மைதானத்தில் நடைபெற உள்ளது.