covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு

covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு

காவல் பணியின் போது கொரோனாத் தொற்றால் இன்னுயிர் நீத்த காவலர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக “வீரக்காவலர்கள்” நினைவு கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர்.

காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல் பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த காவலர்களின் நினைவாக “வீரக்காவலர்கள்”  நினைவு கல்வெட்டை டிஜிபி அலுவலக வளாகத்தில் முதல்வர் பழனிசாமி  திறந்து வைத்து மரக்கன்றையும் நட்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி,ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் என பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube