பெண்களே உங்க சரும அழகை மெருகூட்ட சூப்பர் டிப்ஸ்!

பெண்களை பொறுத்தவரையில் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்துவதுண்டு.

By leena | Published: May 29, 2019 11:41 AM

பெண்களை பொறுத்தவரையில் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்துவதுண்டு. அந்த வகையில் நாம் செயற்கையான முறையில் பல வலைகளை தேடுவதால், பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. எனவே நாம் இயற்கையான முறையை பின்பற்றுவது மிகவும் சிறந்தது. தற்போது இந்த பதிவில் சரும அழகை இயற்கையான முறையில் மெருகூட்டுவதற்கான சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

 முட்டை

நமது முக அழகை கெடுக்கும் முகப்பருவை போக்குவதற்கு, நாட்டுக்கோழி முட்டையின், வெள்ளை கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து பூசி வந்தால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் நீங்கி, முகம் பொலிவாக காணப்படும்.

 திராட்சை

முகம் பளபளப்பாக திராட்சை பழ சாற்றை முகத்தில் பூசி விட்டு, அதனை சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு, 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.

தக்காளி

தக்காளியை முகத்தில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற விட்டு பிறகு முகத்தை கழுவினால், முகம் பொலிவாக காணப்படும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில், தோல்களை நீக்கி, அதனை நன்கு அரைத்து, அதனுள் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால், முக சுருக்கம் மற்றும் முகப்பருக்கள் நீங்கி முக பொலிவாக காணப்படும்.
Step2: Place in ads Display sections

unicc