கையில் ஆந்தையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

  • குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் வீடியோ ஒன்றில் ஆந்தையை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
  • இவர் கூகை என்ற ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ் மற்றும் அதிக கமெண்ட்ஸ்களை பெற்றுவரும். இந்நிலையில், அதற்காகவே அந்த பெண் வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  அந்த வீடியோவில் ஆந்தை ஒன்றை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த வீடியோ மீது தற்போது வனத்துறை அதிகாரிகளின் கவனம் பெற்றுள்ளது. என்னவென்றால் ஆந்தைகள் இரவு நேரங்களில் மட்டும் வெளியே சென்று உலவும். அது மரப்பொந்துகள், மலையையொட்டியுள்ள காடுகளில் வாழும் குணமுடையதாகும்.

 

View this post on Instagram

 

ટિકટોક ગર્લ કિર્તી પટેલનો ઘુવડ સાથે વીડિયો વાયરલ થતાં તે વિવાદમાં આવી ગઇ છે. બાર્ન આઉલ સંરક્ષિત પ્રાણીની કેટેગરીમાં આવતું હોવાથી કિર્તી પટેલ તેમના આ વીડિયોના કારણે વિવાદમાં આવી ગઇ છે. ઘુવડ સાથે રમત કરતો વીડિયો હોવાથી પશુ પ્રેમી લોકોએ રોષ વ્યક્ત કર્યો છે. વન વિભાગ દ્રારા આ મામલે કાર્યાવાહીની માંગણી કરી છે. @kirti_patel_official5143 #kirtipatel #animal #tiktok #owl #viralvideo

A post shared by VTV Gujarati News and Beyond (@vtv_gujarati_news) on

இந்நிலையில், ஆந்தைகளை அழிக்கப்படும் போது, குடியிருப்புகளில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன. அவையும் வெட்டப்படும் போது, தங்க இடம் கிடைக்காமல் வீடுகளை நோக்கி, ஆந்தைகள் வரத் துவங்கிவிடும். இவை சிறிய வகை பாம்புகள், எலிகள், பூச்சிகள், ஓணான்களை தின்று வாழும் இயல்புடையது. இதனிடையே கீர்த்தி படேல் கூகை என்ற வகை கொண்ட ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் அந்த பெண் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்