மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் போது வயலின் வாசித்த பெண்.!

  • டாக்மர் டர்னர் என்ற 50 வயது பெண் வயலின் இசை கலைஞருக்கு மூளையில் சிறிய கட்டி இருந்து உள்ளது.
  • அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்த போது மயக்கத்தில் இருந்த டாக்மர் வயலின் வாசித்துள்ளார்.

லண்டனில் டாக்மர் டர்னர் என்ற 50 வயது பெண் வயலின் இசை கலைஞர் உள்ளார்.இவருக்கு கடந்த  2013-ம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது.அப்போது அவரின் மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த கட்டி இடது கையின் செயல் திறனை கட்டுப்படுத்தும் என்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்தால் தனது வயலின் வாசிக்கும் திறன் இழந்துவிடலாம் என எண்ணி டாக்மர் அறுவை சிகிச்சையை தவிர்த்து வந்துள்ளார்.இந்நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் டாக்மருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிசையில் தனது வயலின் இசை திறமை தன்னை விட்டு சென்றால் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என டாக்மர் கூறினார்.

இதையெடுத்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பேராசிரியர் கீமார்ஸ் அஷ்கன் இந்த அறுவை சிகிச்சையால் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை கூறினார்.அதன்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்த போது மயக்கத்தில் இருந்த டாக்மர் வயலின் வாசித்துள்ளார்.

அவர் வயலின் வசித்தபோது  மருத்துவர்கள் தலையை பிளந்து சிறு சிறு கட்டிகளை அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அறுவை சிகிச்சை செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு டாக்மர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.

அறுவை சிகிக்சை குறித்து டாக்மர் கூறுகையில் , நான் 10 வயதில் இருந்து வயலின் வாசித்து வருகிறேன்.  இந்த அறுவை சிகிக்சையில் என்னுடைய வயலின் வாசிப்பு திறன் இழந்திருந்தால் என் இதயம் நொறுங்கி இருக்கும் ” என கூறினார்.

author avatar
Dinasuvadu desk