பெண்களுக்கு சோகம் மட்டும் தான் சொந்தமா ??காரிகை வீடியோ

திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கு இணையாக சமூக வலைதளமான யூ-டுப்பில் பல ஆல்பம் பாடல்கள் வெளியாகி வருகின்றது.அந்த வகையில் பெண்களை மையப்படுத்தி வெளியான ஆல்பம் பாடல் தான் காரிகை.அந்த பாடலின் விமர்சனத்தை நாம் இதில் காண்போம்…

கடல் அலை போல ஓயாமல் அடிக்கும் சில பெண்களின் வாழ்வில் நடக்கும் துன்பங்களை தடுக்க முடியாது .வேசம் இல்லா பாசம் எங்கும் பல பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக வரும்.காலம் மாற மாற அடிமை படுத்தும் முறையும் நன்றாக மாற்றம் கண்டுள்ளது,உலகின் ஈடு இணை இல்லாத சக்தி பெண்கள்,அந்த சக்தியை சிலரின் இறக்கமற்ற காம வெறி கட்டுபடுத்துகிறது .. கண்டிபாக தோல்வி நிலைபெறாது.ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகும் போது . அதை சரி செய்யாமல் சமூகமும் பழி வாங்குவது ஏன் ??காமத்தின் வன்மத்தை சட்டம் போட்டு தடுத்தாலும்,
உன்னை நீ ஒழுக்கத்தின் வட்டத்தில் வைக்கும் வரை மாறாது !! இது போன்ற சம்பவங்களை தனது இயக்கத்தின் மூலம் துணிவுடன் அழகாக பதிவு செய்திருக்கிறார் திரு.சங்கீத் கனகம்.அதை உள்வாங்கி பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திரைக்கதை மூலம் முல்லைவேந்தன் நன்கு பலம் சேர்த்து இருக்கிறார்.இசையில் குணசேகரன் உணர்வுபூர்வமான இசையை வழங்கியுள்ளார்.அர்தமுள்ள வரிகளை எழில்வேந்தன் சேர்த்திருக்கிறார்.இயக்குனர் சங்கீத் எண்ணகளை தெளிவாக ஒளிப்பதிவு செய்துள்ளனர் அருண் &அபி.வன்கொடுமைக்கு எதிரான பாடல் உருவாகிய இந்த காரிகை குழுவினர்க்கு எங்களின் வாழ்துக்கள்…

வீடியோவை பார்க்க கிளிக் செய்க:https://youtu.be/ram8FrvERt0

பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு  இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை ….

Leave a Comment