பெண்ணினமே பெருமைப்பட வேண்டிய தருணம்! கோடீஸ்வரியானார் மாற்றுத்திறனாளி கௌசல்யா!

  • ஒரு கோடியை வென்ற கவுசல்யா. 
  • உதவி ஆட்சியாளராக ஆகா வேண்டும்

By Fahad | Published: Apr 01 2020 03:20 PM

  • ஒரு கோடியை வென்ற கவுசல்யா. 
  • உதவி ஆட்சியாளராக ஆகா வேண்டும் என்பதே எனது ஆசை. 
ஒவ்வொரு வாரமும் கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தங்களது வாழ்க்கையை பல சவால்களோடு எதிர்கொள்ளும், பெண்களை அடையாளம் கண்டு அவர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து, அவர்களது வாழ்க்கைக்கு ஒளியேறுகின்றனர். அந்த வகையில், உலகிலேயே முதல்முறையாக காத்து கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி பெண்ணான கவுசல்யாவை மேடையேற்றி உள்ளனர். மாற்றுத்திறனாளியான கவுசல்யா,  15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். கவுசல்யா ஒரு கோடியை வெல்வாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியை வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 1 கோடி ரூபாய் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.  நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் அவர் குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே ஆசை என்று தெரிவித்துள்ளார்.