விமான ஜன்னலை திறந்த பெண் கைது..! தாமதமாக புறப்பட்ட விமானம்

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு புறப்பட விமானத்தில் ஜன்னல் கதவுகளை திறந்தால், பெண் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர்.

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமான பணிப் பெண்கள் சீட் பெல்ட்களை அணிய மற்றும் ஜன்னல் மூடப்பட்டுதுள்ளதை ஊறுதிப்படுத்துமாறு அறிவித்தனர்.

இந்த நிலையில், விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகில் இருந்த அவசர வழி ஜன்னலை திறந்து வைத்திருந்துள்ளார். இதைக் கண்ட விமானப்பணிப் பெண், திறந்திருந்த ஜன்னலை மூடிவிட்டு சென்றுள்ளார்.

Image result for காத்து வாங்குறதுக்காக ஃபிளைட் ஜன்னல் கதவை திறந்த பெண் பயணி கைது!

பணிப்பெண் சென்றதும், அந்தப் பயணி ஜன்னலை மீ்ண்டும் திறந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பணி்ப்பெண், ஏன் ஜன்னலை திரன்திர்கள் எனக் கேட்டதுக்கு, “விமானத்துல ஒரே புழுக்கமா இருக்கு. அதான் காத்து வரட்டுமேன்னு ஜன்னலை திறந்து வைத்தேன்” என கூலாக பதிலளித்துள்ளார்.

பயணியின் இந்த செயலால் விமானம் புறப்படுவதில் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. மேலும், அந்த பெண்பயணியை காவல் துறையினர் கைது செய்தனர்.