எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடையாது!

இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் கருணாஸ்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான மணிமாறன் கூறுகையில், இப்படம், எதிர்குரலின் அவசியத்தை பற்றி பேசியிருப்பதாகவும், ‘எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது. ஜல்லிக்கட்டு, 8 வழிச்சாலை, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற சமூக பிரச்சனைகளுக்கு போராட்டத்தால் தான் தீர்வு கிடைத்தது. இதை உணர்த்தவே எதிர்குரலை பதிவு செய்யும் கம்யூனிஸ்ட் படங்களுக்கு எப்போதுமே தேவை இருக்கும்’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.