விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி

By venu | Published: Aug 14, 2019 10:39 AM

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை சேர்த்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு.மேலும் விமானப்படையின் ஸ்குவாடன் லீடர் மிண்டி அகர்வாலுக்கு யுவ சேவா பதக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc