விமானப்படை தினத்தையொட்டி சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன்

விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேசம் காசியாபாத்தில் நடைபெறும் வான் சாகச

By venu | Published: Oct 09, 2019 09:30 AM

விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேசம் காசியாபாத்தில் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்கினார் விங் கமாண்டர் அபிநந்தன். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் 87வது தினம் கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் வான் சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்கினார் விங் கமாண்டர் அபிநந்தன்.  
Step2: Place in ads Display sections

unicc