ஆன்லைனில் பணம் சம்பாதிக்கனுமா? ஸ்மார்ட்போனை தொடாதீர்கள்.!

இப்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. இதனால் நேரம் விரயமாவதுடன், வேறு பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணம். இந்த மோகத்திலிருந்து மீள செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’(Hold) எனும் பெயரிலான இந்தச் செயலி(app), ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் இருந்தால், அதற்குப் பரிசாகப் புள்ளிகள் வழங்குகிறது.மேலும் அப்புள்ளிகளைக் கொண்டு விரும்பியதை வாங்கவும் செய்யலாம்.

20 நிமிடம் போனைப் பயன்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறலாம். இந்தப் புள்ளிகளைச் சேர்த்து ஆன்லைன் ஷாப்பிங், மால்களில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கல்லூரி மாணவர்களை மனத்தில் கொண்டு நார்வேயில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Will you make money online? Do not touch the smartphone.!

author avatar
Dinasuvadu desk

Leave a Comment