வெட்டுகிளிகளை எல்லாமா சாப்பிடுவார்கள்.? சிம்பு பட நடிகையின் ஆவேச பதிவு.!

விவசாயிகள் எதிர்கொள்ளும் வெட்டுகிளிகளின் அட்டாகாசம் குறித்து சிம்புவின்

By ragi | Published: May 30, 2020 06:26 PM

விவசாயிகள் எதிர்கொள்ளும் வெட்டுகிளிகளின் அட்டாகாசம் குறித்து சிம்புவின் காளை பட நடிகையான மீரா சோப்ரா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2005ல் எஸ். ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இந்த படத்திலுள்ள மயிலிறகே மயிலிறகே பாடல் அனைவர் மனதையும் ஈர்க்கும். அதனையடுத்து மருதமலை, காளை, இசை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடி வரும் இந்த சூழ்நிலையில் புதிதாக வெட்டுகிளிகள் படையெடுத்து விவசாய நிலங்களை சூறையாடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தை பாதுகாக்க இயலாமல் பெரிதும் வருத்தத்தில் உள்ளனர். தற்போது இந்த வெட்டுகிளிகளின் தாக்கம் ஊட்டி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இந்த வெட்டுகிளிகளை பிடித்து உணவுக்காக விற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதனை கண்ட மீரா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் உணவுக்காக வெட்டுகிளிகளை விற்பனை செய்யும் வீடியோவை பார்த்தேன் என்றும், இந்த வீடியோ உண்மையானதா? என்றும், மக்கள் உண்மையிலேயே வெட்டுகிளிகளை சாப்பிடுகிறார்களா? என்றும் கேட்டுள்ளார். தற்போது எதிர்கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து இன்னுமா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

 

Step2: Place in ads Display sections

unicc