இன்று விசாரணை..! பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்கப்படுமா..?

இன்று விசாரணை..! பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்கப்படுமா..?

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ க்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

ஆனால், நீதிபதி பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கையை நிராகரித்து, வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில், அந்த மனு மீதான தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் பைலட் மற்றும் 18 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் காங்கிரசுக்கு 102 இடங்கள் மட்டுமே உள்ளது.

இந்த 6 எம்.எல்.ஏக்கள் இணைபுக்கு தடைவிதிக்கப்பட்டால் காங்கிரஸ் பலம் 96 ஆககுறைந்துவிடும்.  வருகின்ற 14-ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
ஏமாற்றத்தில் வாகனஓட்டிகள்...இன்றைய நிலவரம்
அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்!
பாகிஸ்தானில் சாலை விபத்து... சம்பவ இடத்தில் 8 பேர் பலி...
தாடி வளர்த்த காவலர்... வீட்டுக்கு அனுப்பிய அதிகாரி... மழித்து விட்டு மீண்டும் பணியில் அந்த காவலர்...
சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை... மோடி பெருமிதம்...
லடாக் விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இந்தியாவுக்கே... வெள்ளை மாளிகை அறிவிப்பு...
சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷிதீப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!
இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!