உலக கோப்பை போட்டி நடைபெறுமா ? கூடுகிறது ஐசிசி நிர்வாகக் குழு கூட்டம்

உலக கோப்பை போட்டி நடைபெறுமா ? கூடுகிறது ஐசிசி நிர்வாகக் குழு கூட்டம்

கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து  ஐசிசி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலக நாடுகள்  திணறி வருகின்றது.கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தான் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கவும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.பொருளாதார ரீதியாக உலக நாடுகள் சரிவை கண்டு உள்ளது.அதுமட்டும் அல்லாமல் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது. விளையாட்டு போட்டிகள் மூலமாக கிடைக்கும் வருவாயும் தடைபட்டுள்ளது.

அந்த வகையில் தான் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை டி -20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 -ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது கொரோனா காரணமாக உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவேதான் வருகின்ற 28-ஆம் தேதி ஐசிசி நிர்வாகக்குழு கூடுகிறது.இந்த கூட்டத்தில் டி-20 போட்டிகளை நடத்தலாமா அல்லது ஒத்திவைக்கலாமா என்று விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்குஇடையில் தான் ஐசிசி நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர்  செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த தகவலில் ,28-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் 3 முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.உலகக்கோப்பை போட்டிகளை நடத்தவிட்டால் ஆஸ்திரேலியா கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  

 

 

 

Join our channel google news Youtube