திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா ? ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் விளக்கம்

  •  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார்.
  •  திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.இதனிடையே இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார்.

திமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ..!ஸ்டாலினை சந்திக்கும் அழகிரி

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூற வந்தேன். திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, எங்களுக்குள் விரிசல் இல்லை .கூட்டணிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை அனைத்தும் பேசி சரி செய்து கொள்வோம்.தமிழகம், புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.