ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? காமெடி நடிகர் வடிவேலுவின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வந்த

By Fahad | Published: Apr 02 2020 11:28 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வந்த நிலையில், தனது கட்சி குறித்த காரியங்களில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இவர் தனது கட்சியின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார். இவரது இந்த திட்டத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வடிவேலு அவர்கள் கூறுகையில், 'ராஜ்ஜினி கற்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. கட்சிக்கு ஒருவர். ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. முதல்வர் பதவியில் ஆசையில்லை என்பது நல்ல விஷயம். நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம் என கூறியுள்ளார்.