கொரோனாவால் ஐபிஎல் 2020 வெளிநாடுகளில் நடக்கவுள்ளதா?

13 ஆம் ஐபிஎல் டி-20 போட்டி, இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.  இதனைதொடர்ந்து, மார்ச் 29ல் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியா-தென்னாபிரிக்கா இடையான போட்டிகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ரத்து செய்தது. மேலும், ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதியையும் தாண்டி தள்ளிப்போகும் என தகவல் வெளியாகின.

Image result for ipl postponed 2020

மேலும் இதுகுறித்து சவுரவ் கங்குலி, இந்தாண்டு போட்டிகளை குறைத்து ஐபிஎல் தொடர் நடக்கும் என தெரிவித்தார். ஆனால், போட்டிகளை குறைக்க ஐபிஎல் நிர்வாகத்தினர் முன்வரவில்லை என கூறிவந்தனர். மொத்தமாக 60 போட்டிகளையும் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2009ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள், 47 நாட்களாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதேபோலவே, கொரோனா வைரஸின் தாக்கத்தை பொறுத்ததே இந்தாண்டு ஐபிஎல்-லின் பாதி போட்டிகள் இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிலும் நடக்கும். அப்படி இல்லையெலில், அனைத்து போட்டிகளும் வெளிநாட்டில் நடத்தப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.