வாழ்வா ? சாவா? 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறுமா இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது  ஒருநாள் போட்டி நாளை  நடைபெறுகிறது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா-நியூசிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

டி20 தொடர் முடிந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 348 ரன்கள் என்ற வலுவான இலக்கை  நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.ஆனால் இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 348 ரன்களை எளிமையாக எட்டி வெற்றிபெற்றது.இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.இரு அணிகள் மோதும் 2-வது  ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் (Eden Park) மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்படும்.இல்லையென்றால் இந்திய அணி நாளைய போட்டியில் தோல்வி அடையும் நிலையில் தொடரை இழக்க நேரிடும்.